தென்கரை பேரூராட்சி நிர்வாகம் அலட்சியம் : பூங்காவில் பொதுக்கழிப்பிடம் கட்டும் பணி தாமதம். - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 10 January 2023

தென்கரை பேரூராட்சி நிர்வாகம் அலட்சியம் : பூங்காவில் பொதுக்கழிப்பிடம் கட்டும் பணி தாமதம்.


தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே  தென்கரை பேரூராட்சி  பாரதி நகர் பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் பொழுது போக்கு பூங்கா கட்டப்பட்டது.  அந்த பொழுது போக்கு பூங்கா அருகில், கழிப்பிடம் கட்டுவதற்காக பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. ஆபத்தான நிலையில் இருக்கும் பள்ளத்தால், பொதுமக்கள் பீதியில் உள்ளனர். 

தென்கரை பேரூராட்சி தலைவர் நாகராஜ் மற்றும் செயல் அலுவலர், ஒப்பந்ததாரர் ஆகியோர், கழிப்பிடம் கட்டாமல் தாமதித்து வருகின்றனர். இதனால், பூங்காவிற்கு வந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் பெண்கள் இயற்கை உபாதைகளை கழிக்க இடமில்லாமல், பூங்கா வளாகத்தை திறந்த வெளி கழிப்பிடமாக பயன்படுத்தும்  அவல நிலை உள்ளது. மேலும், பூங்கா ஆடு மேடுகள் மேயும் திறந்த வெளி மந்தையாகவும்  மாறி விட்டது. இது குறித்து, பேரூராட்சி நிர்வாகத்திடம் கேட்டால் உரிய பதில் அளிக்கவில்லை. 


பூங்காவை உரிய வகையில் பராமரித்து, பூங்காவை பாதுகாக்க பாதுகாவலர் நியமனம் செய்வதுடன், கழிப்பிடத்தை விரைந்து கட்டித் தர வேண்டும் என்று பொது மக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த விஷயத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ஆகியோர் உரிய நடவடிக்கை எடுப்பார்களா? என்று சமூக ஆர்வலர்களும் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad