தேனி மாவட்டம், பெரியகுளம் சுவாமி விவேகானந்தரின் 160 வது பிறந்த நாளை முன்னிட்டு, தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை மாரியம்மன் கோவில் அருகே இந்து முன்னணி மற்றும் பாஜக நிர்வாகிகள் சார்பில் விவேகானந்தரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
மேலும் விவேகானந்தரின் பிறந்த தினத்தை தேசிய இளைஞர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி பாஜக மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகள் சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளை கொண்டாடினர். பொதுமக்கள் ஆர்வமுடன் இனிப்புகளை வாங்கி சென்றனர்.
No comments:
Post a Comment