நிகழ்வில் பாஜக, அதிமுக, பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி திமுக வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் தலைமையில் திமுகவில் இணைத்து கொண்டனர். பாஜக மாவட்ட விவசாய அணி துணை தலைவர் சண்முகம், தலைமையில் பாஜகவினர், திமுகவில் இணைந்தனர்.
திமுகவில் புதிதாக இணைந்தவர்களுக்கு தேனி வடக்கு மாவட்ட செயலாளர் தங்கத்தமிழ் செல்வன் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார். சட்டமன்ற உறுப்பினரும், தெற்கு ஒன்றிய செயலாளருமான கே.எஸ்.சரவணகுமார் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தார். பெரியகுளம் ஒன்றிய பெருந்தலைவர் தங்கவேல், பெரியகுளம் நகர செயலாளர் முகமது இலியாஸ், வடக்கு ஒன்றிய செயலாளர் பாண்டியன், நகர்மன்ற தலைவர் சுமிதா சிவக்குமார், தேனி ஒன்றிய பெருந்தலைவர் சக்கரவர்த்தி, நகரசெயலாளர் நாராயணபாண்டியன், தேனி நகர்மன்ற தலைவர் ரேணு பிரியாபாலமுருகன், தென்கரை பேரூராட்சி தலைவர் நாகராஜ், துணைத் தலைவர் ராதா ராஜேஷ், பேரூர் திமுகசெயலாளர் பாலமுருகன், தாமரைக்குளம் பேரூராட்சி தலைவர் பால்பாண்டி, பணி நியமனகுழு தலைவர் பாலாமணி பழனிமுருகன், தெற்கு ஒன்றிய அவைத்தலைவர் அசோக்குமார், ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள் நிர்வாகிகள் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment