தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மலை மேல் அமைந்துள்ளது பெரிய நாயகி அம்மன் உடனுறை கைலாசநாதர் திருக்கோவில், கோவிலில் பிரதோஷ தினத்தை முன்னிட்டு நந்திகேஸ்வரருக்கும் கைலாசநாதர் இருக்கும் ஒன்பது வகையான அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனைகள் காட்டப்பட்டது. உலக நன்மைக்கான கூட்டு வழிபாடுகளும் நடைபெற்றது.
தேனி திண்டுக்கல் மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வருகை தந்த அனைவருக்கும் கோவில் நிர்வாகத்தின் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அன்பர் பணி செய்யும் பராமரிப்பு குழு தலைவர் ஜெயபிரதீப், செயலாளர் சிவக்குமார் மற்றும் குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment