தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை தண்டுபாளையம் பள்ளிவாசல் பின்புறம் பத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் தென்னங் கீற்றுகளில் கிடுகு பிண்ணும் தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று நள்ளிரவு தென்னங் கிடக்குகள் அடுக்கி வைத்திருந்தின் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று இருசக்கர வாகனம் மற்றும் இரண்டு சைக்கிள் மீது மர்ம நபர்கள் தீ வைத்ததில் தீப்பற்றி எரிய தொடங்கியது.
இந்நிலையில் அருகில் இருந்த கிடுகில் தீப்பற்றிய தீ மலமலவென குடியிருப்பு பகுதிக்கு அருகில் பரவியது அப்பகுதியில் குடியிருந்த மக்கள் உடனடியாக செயல்பட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். திடீரென தீ பற்றி எரிவதை அறிந்த கிடுகு பின்னும் தொழிலை செய்து வந்த பாலமுருகன் மற்றும் அக்கம் பக்கம் வீட்டுக்காரர்கள் எழுந்து நீரை ஊற்றி தீயை அணைத்தனர். உடனடியாக தீ அணைக்கப்பட்டதால் அருகில் இருந்த கிடுகுகள் மற்றும் கிடுகு பின்னும் தொழில் கூடங்கள் மற்றும் வீடுகளில் தீ பரவாமல் தடுக்கப்பட்டதால் பெரிய அளவில் பொருள் சேதமும் உயிர் சேதம் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.
இத்தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பெரியகுளம் தென்கரை காவல்துறையினர் தீ விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டதோடு தீவைத்த மர்ம நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை செய்து வருகிறார்கள்.
No comments:
Post a Comment