தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே குள்ளபுரம் கிழக்குத் தெருவை சேர்ந்தவர் அழகுமலை மகன் 45 வயதான பாண்டி .இவருக்கு பிரியா என்ற மனைவியும் விஷ்ணு (9), ஹரிஷ் (12), என்ற இரு மகன்களுடன் அப்பகுதியில் வசித்து வந்துள்ளனர். பாண்டி 6 வருடங்களாக தேனி மாவட்டத்தில் பிரபல அரசு ஒப்பந்ததாரரான KMC எனப்படும் நிறுவனத்தில் தினக்கூலி அடிப்படையில் வேலை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் பெரியகுளம் அருகே புலியோடை பகுதியில் 4.68 கோடி மதிப்பீட்டில் தடுப்பணைகள் மற்றும் புதிதாக குளம் அமைப்பதற்கான பணிகள் கடந்த ஜனவரி மாதம் முதல் தொடங்கி நடைபெற்று வருவதாகவும் இந்தப் பணியில் வேலை செய்து வந்த பாண்டி என்பவர் இன்று வழக்கம்போல் வேலைக்குச் சென்று வேலை செய்து கொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கி உயிர் இழந்ததாக பெரியகுளம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பெரியகுளம் காவல்துறையினர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த பாண்டி என்பவரது உடலை உடற்கூறாய்விற்காக பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இறந்த பாண்டி என்பவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர் .தகவலை அடுத்து பெரியகுளம் காவல் நிலையத்தில் இறந்த பாண்டி என்பவரது உறவினர்கள் குவிந்து பாண்டி என்பவரது இறப்பு குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனக் காவல்துறையினரிடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும், மேலும் மின்சாரம் தாக்கி உயிரிழந்த பாண்டி என்பவரது மனைவி மற்றும் உறவினர்கள் காவல் நிலையத்தில் கதறி அழுததால் அப்பகுதியில் பெரும் சோகம் ஏற்பட்டது .மேலும் இது குறித்து பெரியகுளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment