கொடைக்கானல் தாண்டிக்குடி பண்ணைக்காடு மலைப் பயிர்கள் பூண்டு, பெரியகுளம் மாம்பழம், வத்தலகுண்டு பகுதிகளில் விளையும் வெற்றிலை ஆகியவை நாட்டின் பிற பகுதிகளுக்கு செல்ல வாய்ப்பு அதிகரிக்கும் .
திண்டுக்கல்லில் இருந்து வத்தலகுண்டு வழியாக குமுளிக்கு ரயில் தடம் அமைக்கப்பட்டால் சுற்றுலா வளர்ச்சி பெறும் மத்திய மாநில அரசுகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானல் வந்து செல்லும் நேரம் குறையும் குமுளி வரை ரயில் தடம் அமைக்கப்பட்டால் சபரிமலை செல்வதற்கும் கேரளாவில் உள்ள சுற்றுலா தளங்களுக்கு செல்வது சுலபமாகும் இத்திட்டத்தை செயல்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் .பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்
மத்தியில் இந்திரா காந்தி தலைமையிலான அரசும், மாநிலத்தில் எம்ஜிஆர் தலைமையிலான அதிமுக அரசு இருந்தபோது திண்டுக்கல்லில் இருந்து தேனிக்கு ரயில் தடம் அமைப்பதற்காக சர்வே செய்யப்பட்டது. இதற்காக 15 கிலோமீட்டருக்கு ஒருமுறை கல் பதிக்கப்பட்டுள்ளது.
அந்தத் தடத்தை ஆதாரமாகக் கொண்டு புதிதாக ரயில் தடம் அமைத்து சுற்றுலா வளர்ச்சி பெற ஊக்குவிக்க வேண்டும், மத்திய மாநில அரசுகள் இந்த திட்டத்தை அமல்படுத்தினால் இரு மாநில மக்களும் வட மாநில மக்கள் தென் மாநிலத்திற்கு அதிக அளவில் சுற்றுலா வருவர், மேலும் குறிப்பாக தேனி,திண்டுக்கல் மாவட்டங்களில் இருந்து அதிக அளவில் கேரளாவிற்கு விவசாய பணிகளுக்கு செல்கின்றன .அவர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும் சுற்றுலா மேம்பாடும் கம்பம் கூடலூர் போடி பகுதிகளில் விளையும் பண பயிர்களான ஏலம், மிளகு பிற மாநிலங்களுக்கு கொண்டு செல்வதற்கு எளிதாக இருக்கும் .இரு மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்ற மத்திய மாநில அரசுகள் முடிவெடுக்க வேண்டும் என அரிமா சங்க தலைவர் ராமநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment