தேனி மாவட்டம் பெரியகுளம் கைலாசபட்டி அருகில் உள்ள கைலாசநாதர் மலைக்கோயிலில் சித்திரை - 1 தமிழ் புத்தாண்டு நாளில் அதிகாலையில் கைலாசநாதருக்கும் பெரியநாயகி அம்பாள் க்கும் பலவகையான அபிஷேகம் நடைபெற்றது காலை 6-15 மணிக்கு கைலாசநாதர்மேல் சூரிய ஒளிபட்டது பின்னர் தீபாராதனைகளும் நடைபெற்றது.
காலையில் இருந்து பக்தர்கள் தரிசனம் செய்து வருகை தந்து கொண்டிருந்தார்கள் வருகை தந்த பக்தர்களுக்கு கட்டளைதாரர்கள் சார்பாக பிரசாதம் வழங்கப்பட்டது கைலாசபட்டி இராஜா கம்பளத்தார் சமுதாய மக்கள் சார்பாக பக்தர்கள் ஊரில் இருந்து பால்குடம் எடுத்து கைலாசநாதர் மலை கோயிலுக்கு கொண்டுவந்து பக்தியுடன் தரிசனம் செய்தார்கள் கோயில் அடிவாரத்தில் சிறப்பான அன்னதானம் வழங்கினார்கள்.
மலைமேல் நடக்கும் சிற்பான நிகழ்ச்சிகளை அன்பர் பணிசெய்யும் பராமரிப்பு குழு தலைவர் வி.ப.ஜெயபிரதீப் செயலாளர் க.சிவகுமார் மற்றும் குழு உறுப்பினர்கள் கோயில் நிர்வாகத்தின் சார்பாக ஏற்பாடு செய்து இருந்தனர்.
No comments:
Post a Comment