தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கர் திருவுருவ வெண்கல சிலைக்கு அம்பேத்கரின் 132 வது பிறந்த தினத்தை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சியினர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
முதல் நிகழ்ச்சியாக பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணக்குமார் வழங்கிய அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான எஸ் எஸ் ஸ்டீல் படியினை திமுக வடக்கு மாவட்ட செயலாளர் தங்க. தமிழ்ச்செல்வன் திறந்து வைத்தார் பின்பு தங்க. தமிழ்ச்செல்வன் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே .எஸ். சரவணகுமார் மாவட்ட அமைத்தலைவர் பி.டி செல்லபாண்டியன் தெற்கு ஒன்றிய செயலாளர் எல் .எம். பாண்டியன் நகர செயலாளர் முகமது இலியாஸ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்
அதன் பின்பு பல்வேறு கட்சியினர் தொடர்ந்து வருகை தந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர் மேலும் ஒவ்வொரு கிராமத்தில் இருந்தும் முளைப்பாரி மாவிளக்குடன் பால்குடம் ஆகியவற்றை எடுத்து வந்து அம்பேத்கர் அவர்களுடைய சிலைக்கு அபிஷேகம் செய்தனர்
No comments:
Post a Comment