இம்முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளுக்காக அரசுத்துறை அலுவலங்களுக்கு நேரில் சென்று அலுவலர்களை சந்தித்து வழங்கி வரும் நிலையினை மாற்றி, மாதம் ஒருமுறை மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஒரு கிராமத்தினை தேர்ந்தெடுத்து அனைத்துறை அலுவலர்களும் மக்களை தேடி, மாவட்ட நிர்வாகமே நேரில் சென்று அங்கு பொதுமக்களை சந்தித்து, ஒவ்வொரு இடத்திலும் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று அதற்கு தீர்வுகாணும் வகையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்கள் நடத்தப்படுகின்றது.
மேலும், பொதுமக்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ்கள் இ-சேவை மையங்கள் மூலம் பெறப்பட்டு, சரிபார்க்கப்பட்டு அதனை டிஜிட்டல் சான்றிதழ்களாக இ-சேவை மையங்கள் மூலமாகவே வழங்கப்பட்டு வருகிறது. இவ்வகையில் பல்வேறு விதமான சான்றிதழ்கள் இ-சேவை மையங்கள் மூலமாக விரைவாக வழங்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு அரசு மாணவ, மாணவியர்களின் கல்வி தரத்தினை மேம்படுத்துகின்ற வகையில் பல்வேறு கல்வி சார்ந்த திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. அதனடிப்படையில், மாணவ, மாணவியர்களின் இடைநிற்றலை தவிர்த்திடும் பொருட்டு மேல்படிப்பு தொடருவதற்கான பல்வேறு கடன் உதவிகள் வங்கி மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. உயர் கல்வி தொடர ஏதேனும் தடை ஏதுமிருப்பின் உரிய அலுவலரை அணுகி ஆலோசனை பெறலாம்.


பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதனால் மனிதர்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பல்வேறு தீங்குகள் ஏற்படுகிறது. பிளாஸ்டிக் பொருட்கள் நீர் நிலைகளில் கலப்பதனால் நீர்வாழ் உயிரினங்களுக்கும் மற்றும் மீன்கள் வளர்ச்சியினையும் பாதிக்கிறது. எனவே, ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை முடிந்த வரையில் பயன்படுத்தாமல் அதற்கு மாற்று பொருட்களை உபயோகிப்பதை அதிகப்படுத்த வேண்டும். இன்றைய தினம் நடைபெறும் இம்மக்கள் தொடர்பு முகாமில் வருவாய்த்துறை, சமூக பாதுகாப்பு திட்டம், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புதத்துறை, பொது சுகாதாரம் மற்றும் நோயத்தடுப்புத்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மை பொறியியல் துறை மற்றும் முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டம் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் 163 பயனாளிகளுக்கு ரூ.28.69 இலட்சம் மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளும், 878 பயனாளிகளுக்கு இ-சேவை மூலம் பதிவு செய்யப்பட்ட பல்வேறு சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்று அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை பொதுமக்கள் பயன்படுத்தி தங்களது வாழ்வில் வளம் பெற வேண்டும்.
இம்முகாமில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் உரிய விசாரணைக்கு உட்படுத்தி, அதிகபட்சமாக 30 நாட்களுக்குள் தீர்வு காணும் வகையில் துறை சார்ந்த அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா, இ.ஆ,ப.. அவர்கள் தெரிவித்தார். முன்னதாக அனைத்துறைகளின் சார்பில் அமைப்பட்டிருந்த கண்காட்சி மற்றும் மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டார்கள். அதனைத் தொடர்ந்து பல்வேறு துறைகளை சார்ந்த துறைத் தலைவர்கள் தங்களது துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் மானிய விவரங்கள் குறித்து பொதுமக்களுக்கு எளிதில் அறிந்திடும் வகையில் எடுத்துரைத்தார்கள்.
இம்முகாமில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி, மாவட்ட ஊராட்சித்தலைவர் திருமதி க.ப்ரிதா, உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் இரா.பால்பாண்டி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் டி.மோகன்குமார், துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) மரு.போஸ்கோ ராஜா, போடிநாயக்கனூர் வட்டாட்சியர் திருமதி அழகுமணி, ஊராட்சி மன்றத்தலைவர் திருமதி பி.வனிதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment