அமர்நாத் புனித யாத்திரையின்போது, பனிமலை நிலச்சரிவில் சிக்கி தவித்து, பத்திரமாக வீடு திரும்பிய உத்தமபாளையம் மற்றும் சின்னமனூரை சேர்ந்த 4 நபர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களை நேரில் சந்தித்தனர். - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 20 July 2023

அமர்நாத் புனித யாத்திரையின்போது, பனிமலை நிலச்சரிவில் சிக்கி தவித்து, பத்திரமாக வீடு திரும்பிய உத்தமபாளையம் மற்றும் சின்னமனூரை சேர்ந்த 4 நபர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களை நேரில் சந்தித்தனர்.


தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அமர்நாத் புனித யாத்திரை சென்று பனிமலை நிலச்சரிவில் சிக்கி தவித்து, பத்திரமாக வீடு திரும்பிய உத்தமபாளையம் மற்றும் சின்னமனூர் பகுதியை சேர்ந்த 4 நபர்கள் தமிழ்நாடு அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா, இ.ஆ.ப., அவர்களை நேரில் சந்தித்து நன்றியை தெரிவித்தனர்.

ஜம்மு காஷ்மீரில் உள்ள அமர்நாத் குகை கோயிலில் உள்ள இயற்கை பனி லிங்கத்தை தரிசிப்பதற்காக உத்தமபாளையம் மற்றும் சின்னமனூர் பகுதியை சேர்ந்த 4 நபர்கள் உள்ளிட்ட தமிழ்நாட்டை சேர்ந்த 21 யாத்ரீகர்கள் சென்னையிலிருந்து கடந்த 02.07.2023 அன்று புறப்பட்டு சென்று 08.07.2023-ம் தேதி தரிசனம் முடிந்து  காஷ்மீர் ஸ்ரீநகருக்கு இடையே கடுமையான பனிமலை நிலச்சரிவின் காரணமாக சாலை துண்டிக்கப்பட்டு எவ்வித உதவியிமின்றி நடுவழியில் சிக்கி தவித்து வந்தனர். 


சிக்கித் தவித்து வந்த செய்தி அறிந்து தமிழ்நாடு அரசு மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அப்பகுதியில் உள்ள நிர்வாகத்திற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்ததன் அடிப்படையில், ராணுவ வீரர்கள் உதவியுடன் பால்டால் என்ற ராணுவ முகாமில் பத்திரமாக 4 நாட்கள் தங்கவைக்கப்பட்டனர்.


முகாமிலிருந்து, ராணுவ வாகனத்தில் ஜம்மு ரயில்வே நிலையத்திற்கு பத்திரமாக அழைத்து வரப்பட்டு, பின்னர் தமிழ்நாடு அரசு மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த இரயில் பயணத்தின்படி, ஜம்முவிலிந்து, புதுடெல்லிக்கு வந்தடைந்தனர். புதுடெல்லிக்கு வந்தடைந்த யாத்ரீகர்களை தமிழ்நாடு அரசு வரவேற்று, தமிழ்நாடு இல்லத்தில் 2 நாட்கள் தங்க வைத்து அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டது. 


தேனி மாவட்டம், உத்தமபாளையத்தைச் சேர்ந்த செல்லப் பாண்டி மற்றும் அவரது மனைவி செல்வி, சின்னமனூரை சேர்ந்த செந்தில்குமார் மற்றும் ராஜாங்கம் ஆகிய 4 நபர்களுக்கு மாவட்ட ஆட்சித்லைவர் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த இரயில் பயணத்தின்படி, 14.07.2023 அன்று புதுடெல்லியிலிருந்து புறப்பட்டு சென்னை சென்டரல் ரயில் நிலையத்திற்கு 15.07.2023 மாலை வந்தடைந்தனர். பின்னர், அன்று இரவே சென்னையிலிருந்து புறப்பட்டு 16.07.2023 அன்று காலை தேனி வந்தடைந்தனர்.


அமர்நாத் புனித யாத்திரையில் சிக்கி பத்திரமாக வீடு திரும்ப காரணமாக இருந்த தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா, இ.ஆ.ப., அவர்களுக்கு  நான்கு நபர்களும் தங்களை பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் அழைத்து வந்ததற்காக நன்றியை தெரிவித்தனர். இந்நிகழ்வின்போது, பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் திரு.பாலசுப்பிரமணியன் உடன் இருந்தார். 

No comments:

Post a Comment

Post Top Ad