இவ்வேலைவாய்ப்பு முகாமில் தேனி மாவட்டத்திலுள்ள பல்வேறு தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. இந்நிறுவனங்களில் காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு 10-ஆம் வகுப்பு மற்றும் அதற்கு கீழ் உள்ள வகுப்புகள் படித்தவர்கள் மற்றும் 12-ஆம் வகுப்பு, ஐடிஐ, பட்டயப் படிப்பு மற்றும் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகள், பொறியியல் பட்டப் படிப்புகள் படித்தவர்கள் மற்றும் தையல்பயிற்சி முடித்தவர்கள் ஆகிய பல்வேறு கல்வித்தகுதியில் உள்ள வேலைநாடுநர்களை தேர்வு செய்ய உள்ளனர். இவ்வேலைவாய்ப்பு முகாமில் வேலைநாடுநர்கள் கலந்து கொண்டு தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு பெறலாம்.
எனவே வேலைநாடுநர்கள் தங்களது சுயவிபர நகல் மற்றும் கல்விச்சான்றிதழ்களின் நகல்கலுடன் தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் 21.07.2023 அன்று நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தொலைபேசி எண் 04546 – 254510 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாய்ப்பினை தேனி மாவட்ட வேலைநாடுநர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment