தேனி கிராண்ட்மாஸ்டர் செஸ் அகாடமி சார்பில் 44-வது மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிகள். - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 30 July 2023

தேனி கிராண்ட்மாஸ்டர் செஸ் அகாடமி சார்பில் 44-வது மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிகள்.


தேனி கிராண்ட்மாஸ்டர் செஸ் அகாடமி சார்பில் 44-வது மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிகள்  8 வயது,10 வயது, 14 வயது பிரிவுகளில் போட்டிகள்   30.07.23 இன்று காலை 9.30 மணி அளவில் அகாடமி வளாகத்தில் நடைபெற்றது, அகாடமியின் இணை செயலாளர்  S.அமானுல்லா (வனச்சரகர் ஓய்வு) தலைமையேற்று போட்டிகளை  துவங்கி வைத்தார். 

வெற்றிபெற்ற மாணவர்களுக்கு அகாடமி செயலாளர் R.மாடசாமி பரிசுகள் வழங்கி பாராட்டினார்கள், முன்னதாக அகாடமி தலைவரும் தமிழ்நாடு சதுரங்க கழக நடுவருமான S.சையது மைதீன் அனைவரையும் வரவேற்றார். போட்டி இயக்குனர் S. அஜ்மல்கான் போட்டி ஏற்பாடுகளை செய்திருந்தார். K. மேனகா, S.நூர்ஜஹான் நடுவர்களாக செயல்பட்டனர்.


வெற்றி பெற்ற மாணவர்கள் விபரம், Under-8 பிரிவில்:  1. S. பிரிதிவீ 2.R.செல்வநிரன்ஜன் 3.M.லோகேஷ் சக்தி 4.D.ஜெய்ஆதவ் 5.மகிழ்ராஜ். Under-10 பிரிவில் 1.S.சாய்ரிஷி 2, S. தேகவர்த்தினி 3,B. ஜித்தேஷ் 4.J.மகேஷ்வரன் 5,K.தமன்யா. Under - 14  பிரிவில்: 1.K.அஸ்வத், 2.R.பரத், 3.P.புவன்சங்கர், 4.S.பரணி 5.J.தரணிஸ்வரன் ஆகியோர்கள் வெற்றிபெற்றனர்.  


மொத்தம் 112   கலந்துகொண்டனர், ஒவ்வொரு பிரிவுக்கும் தலா 5 சுற்றுகள் , சுவிஸ் முறை படி விரைவுப் போட்டிகளாக நடைபெற்றன.

No comments:

Post a Comment

Post Top Ad