பெரியகுளம் கே ஏ எஸ் பள்ளியில் உலக புலிகள் தினம் கொண்டாடப்பட்டது. - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 29 July 2023

பெரியகுளம் கே ஏ எஸ் பள்ளியில் உலக புலிகள் தினம் கொண்டாடப்பட்டது.


தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள தனியார் பள்ளியான கே ஏ எஸ் பள்ளியில் உலக புலிகள் தினம் கொண்டாடப்பட்டது. பள்ளி மாணவ மாணவியர்கள் புலி வேடங்கள் அணிந்து பள்ளிக்கு வருகை புரிந்தனர். ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் 29 ஆம் நாள் உலக புலிகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. உலக புலிகள் தினம் என்பது புலி வளம் பேணல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கொண்டாடப்பட்டு வருவதாகும். 

புலிகளின் இயற்கை வாழ்விடங்களை காப்பாற்றுவதற்காக உலகளாவிய அமைப்பை ஏற்படுத்தி புலி வளம் பேணும் சிக்கல்கள் குறித்து ஆசிரியப் பெருமக்கள் பள்ளி மாணவ ,மாணவிகளிடம் எடுத்துரைத்தனர். புலிகள் இருக்கும் வாழ்விடங்களை காப்பாற்றுவது நமது கடமையாகும் என்றும் நமது நாட்டின் தேசிய விலங்கான புலிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதையும், அவற்றை பாதுகாக்க அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் பள்ளி மாணவ மாணவியர்களிடம் ஆசிரியப் பெருமக்கள் தெரிவித்தனர். 


பின்னர் பள்ளி மாணவ மாணவியர்கள் புலி வேடங்கள் அணிந்து, புலிகளை பாதுகாப்போம், புலிகளின் வாழ்விடங்களை? பாதுகாப்போம், "நீர் வளத்தினை பாதுகாப்போம்" என்ற வாசகங்கள் கொண்ட பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்வின்போது பள்ளி தாளாளர் சுதர்ஸன் மற்றும் ஆசிரியப் பெருமக்கள் உட்பட பலர் இருந்தனர். இப்பள்ளியில் சமூக மாற்றத்திற்கான பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment

Post Top Ad