கிரிக்கெட்டில் வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது. பெரியகுளம் திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் எல்.எம். பாண்டியன், ஊராட்சிஒன்றிய பெருந்தலைவர் தங்கவேல்ஆகியோர்கள் வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசுகளை வழங்கினார்கள். வடக்கு ஒன்றிய துணைச் செயலாளர் வெங்கடாசலம், கெங்குவார்பட்டி பேரூர் கழகச் செயலாளர் தமிழன், வடுகபட்டி பேரூராட்சி தலைவர் நடேசன், சில்வார்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பரமசிவம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சுப்புலட்சுமி முருகன், மாவட்ட விவசாயி தொழிலாளர் துணை பரமசிவம், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் ஜெயக்குமார், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ராம்ஜி, சருத்துப்பட்டி கிளைக் கழகச் செயலாளர் உதயசூரியன் மற்றும் சில்வார்பட்டி ஊராட்சி கிளைக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
வெற்றி பெற்ற அணியினருக்கு முதல் பரிசாக மேல் மங்களம் அணிக்கு 15000 ரூபாயும் கோப்பையும், இரண்டாம் பரிசாக சில்வார்பட்டி அணிக்கு 10000 ரூபாயும் பரிசுகோப்பையும், மூன்றாம் பரிசாக ஜெயமங்களம் அணியினருக்கு 5000 ரூபாய்பரிசு கோப்பையும் வழங்கப்பட்டன. இந்த போட்டியில் மொத்தம் 20 அணிகள் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment