பெரியகுளம் அருகே திடீர் சாலை மறியல் தேனி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு. - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 21 September 2023

பெரியகுளம் அருகே திடீர் சாலை மறியல் தேனி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள எண்டப்புளி பகுதி பொதுமக்களை அங்குள்ள இந்து முன்னணியினர் ஒன்று திரட்டி திடீரென தேனி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

 


அப்பொழுது சாலை மறியலில் ஈடுபட்ட நபர்கள் இந்து முன்னணிற நிர்வாகியை அவதூறாக பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை நிலைய செயலாளர் ஏசி' பாவரசு மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் ஜாதி கலவரங்களை தூண்டாதே எனவும் கோஷங்கள் எழுப்பினர்.


இந்த ஆர்ப்பாட்டம்  விநாயகர் சதுர்த்தி நாளன்று விநாயகர் சிலையை வாகனத்தில் ஏற்றி பெரியகுளம் பகுதியில் முக்கிய சாலைகளில் ஊர்வலமாக வரும் பொழுது பழைய பேருந்து நிலையம் பகுதியில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலையை கடக்கும் போது சிலர் அம்பேத்கர் சிலையை உடைப்போம் என கோஷம் போட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது .


இதனை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சில தினங்களுக்கு முன்பு இந்து முன்னணி நிர்வாகிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர் இதனுடைய எதிரொலியாக தற்பொழுது இந்த சாலை மறியல் நடைபெற்றது, சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவத்தை அறிந்த பெரியகுளம் உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் பெரியகுளம் காவல் ஆய்வாளர் தலைமைகளான காவல்துறையினர் விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட நபர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சாலை மறியலை கைவிட செய்தனர் பின்பு போக்குவரத்து சரி செய்யப்பட்டு வாகனங்களை அனுப்பி வைத்தனர் இந்த சாலை மறியல் சம்பவத்தால் காலை நேரத்தில் பள்ளி மற்றும் பணிக்கு செல்லக்கூடிய பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad