தேனி மாவட்டம் பெரியகுளம் கைலாசபட்டி அருகில் உள்ள கைலாசநாதர் மலைக்கோயிலில் ஆனி மாதம் 15/7/2023 மகா சனி, பிரதோஷம் மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை நடைபெற்றது நந்திகேஷ்வரருக்கும் கைலாசநாதர்க்கும் ஒன்பது வகையான அபிஷேகம் நடைபெற்று அலங்காரம் செய்து தீபாராதனைகளும் நடைபெற்றது உலக அமைதிக்காக கூட்டு வழிபாடும் நடைபெற்றது.
புனிதமான இந்த மலைக்கோயிலுக்கு வரும் பக்தர்களின் வேண்டுதல் நினைக்கின்ற எண்ணங்கள் நிறைவேறுவதாக பக்தர்கள் நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார்கள் மாவட்டத்தில் இருந்து அதிக பக்தர்கள் வந்து தரிசனம் செய்தார்கள் பிரதோஷ கட்டளைதாரர்கள சார்பாக பிரசாதம் வழங்கப்பட்டது ஏற்பாடுகளை அன்பர் பணிசெய்யும் பராமரிப்பு குழு தலைவர் வி.ப.ஜெயபிரதீப் செயலாளர் க.சிவகுமார் மற்றும் குழு உறுப்பினர்கள் கோயில் நிர்வாகத்தின் சார்பாக செய்து இருந்தனர்
No comments:
Post a Comment