பெரியகுளம் புதியதமிழகம் கட்சி சார்பில் மது கடைகளுக்கு முன்பு மதுபாட்டில்கள் உடைக்கும் போராட்டம். - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 16 July 2023

பெரியகுளம் புதியதமிழகம் கட்சி சார்பில் மது கடைகளுக்கு முன்பு மதுபாட்டில்கள் உடைக்கும் போராட்டம்.


தேனி மாவட்டம் பெரியகுளத்தில் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர்.கிருஷ்ணசாமியின் ஆணைக்கிணங்க பெரியகுளம் வைகை அணை சாலையில் உள்ள தனியார் மதுபான கூடம் முன்பு  புதிய தமிழகம் கட்சியின் சார்பில் தேனி மாவட்ட செயலாளர் சிவகுமார் தலைமையில் "மதுபான கடைகளுக்கு முன்பு  மது பாட்டில்களை உடைக்கும் போராட்டம்" நடைபெற்றது.


போராட்டத்தின் போது மதுவிற்கு எதிராக பல்வேறு கண்டன கோஷங்கள் எழுப்பி, கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆளும் திராவிட முன்னேற்றக் கழக அரசு தேர்தல் வாக்குரிமையின் போது தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று கூறியிருந்த நிலையில் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த பிறகு பூரணமதுவிலக்கு அமல்படுத்தாத காரணத்தினால் ஆளும் அரசுக்கு  எதிராக பல்வேறு கண்டன கோஷங்கள் எழுப்பி ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் தமிழக முழுவதும் மதுவை ஒழித்திட வேண்டுமென போராட்டத்தின் வாயிலாக கோரிக்கை விடுத்தனர். 


சுமார் 50 க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது மதுபாட்டில் உடைக்கப்பட்டது. பெரியகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் கீதா  தலைமையில் பெரியகுளம் காவல் ஆய்வாளர் மீனாட்சி உட்பட ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad