

இந்த விழாவில் கலந்து கொண்ட முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் பத்திரிக்கையாளர்களின் துயரங்களை வேதனையோடு பகிர்ந்து கொண்டார் இந்த விழாவில் அவர் பேசும்பொழுது பத்திரிக்கையாளர்கள் குறைந்த ஊதியத்திலேயே பணியாற்றுகிறார்கள் அவர்களுக்கான பாதுகாப்பினை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும் செய்தி போட்டதற்காக பத்திரிக்கையாளர்களை மிரட்டுவது அச்சுறுத்துவது போன்ற சம்பவங்கள் நடைபெற்று இருக்கிறது அதனை கருத்தில் கொண்டு ஆளும் தமிழ்நாடு அரசு பத்திரிக்கையாளர்களுக்கான பணி பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டும் அதே சமயம் பத்திரிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டிய அரசு நலத்திட்டங்களை வழங்குவதற்கான அனைத்து விதமான நடவடிக்கைகளையும் அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என பேசினார்.
அதேபோல் பத்திரிக்கையாளர்கள் ஆகிய உங்களின் கடைசி பத்திரிக்கையாளராக நான் இணைந்துள்ளேன் நான் ஆரம்பித்துள்ள நமது புரட்சி தொண்டன் பத்திரிக்கை மூலமாக நிருபராகவும் எனது பணியினை சிறப்பாக செய்வேன் என்றும் பேசினார். இவ்விழாவில் பெரியகுளம் அதிமுக நகர்மன்ற குழு தலைவர் ஓ.சண்முகசுந்தரம். mc கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். இந்த விழாவில் தேனி மற்றும் அண்டை மாவட்ட பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டு தங்களுக்கான அடையாள அட்டையிணை பெற்றனர்
No comments:
Post a Comment