சூலை 18-ஆம் நாளினை தமிழ்நாடு நாளாக கொண்டாடும் விதமாக பல்வேறு போட்டிகள் - மாவட்ட ஆட்சியர் தகவல். - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 5 July 2023

சூலை 18-ஆம் நாளினை தமிழ்நாடு நாளாக கொண்டாடும் விதமாக பல்வேறு போட்டிகள் - மாவட்ட ஆட்சியர் தகவல்.


சூலை 18-ஆம் நாளினை  தமிழ்நாடு  நாளாக கொண்டாடும் வகையில் பள்ளி  மாணவ, மாணவிகளிடையே பேச்சு மற்றும் கட்டுரை போட்டிகள் நடைபெற உள்ளது மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஆர்.வி.ஷஜீவனா, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால், தாய்த் தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என பேரறிஞர் அண்ணா அவர்கள் பெயர் சூட்டிய சூலை 18ஆம் நாளினையே “தமிழ்நாடு நாளாக” இனி கொண்டாடப்படும் என்பதை தெரிவிக்கும் வகையில் “தனித்துவ தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்ட 18.07.1967ஆம் நாளினை பெருமைப்படுத்திடும் வகையில் ஆண்டுதோறும்  சூலை 18ஆம் நாள் தமிழ்நாடு நாள் என்ற பெயரில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும்” என அறிவிப்பு வெளியிடப்பட்டது.


இவ்வறிவிப்பிற்கிணங்க, நடப்பு நிதியாண்டில் (2023-24) தாய்த் தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு எனப் பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய சூலை 18-ஆம் நாளினையே தமிழ்நாடு நாளாக கொண்டாடுவது தொடர்பில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட வேண்டுமென தமிழ் வளர்ச்சி இயக்குநர் தெரிவித்துள்ளார். இதன்படி, தேனி மாவட்டத்தில் பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சுப் போட்டிகள் 11.07.2023 அன்று காலை 09.30 மணி முதல் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில்  நடைபெறவுள்ளன.


பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு கட்டுரைப்போட்டி ”தமிழ் இலக்கிய வரலாற்றில் முத்தமிழறிஞர் கலைஞரின் சுவடுகள்” எனும் தலைப்பிலும், பேச்சுப்போட்டி ”தமிழ்த் திரை உலகத்தை புரட்டிப்போட்ட முத்தமிழறிஞர் கலைஞரின் எழுதுகோல்” எனும் தலைப்புகளில் மட்டுமே    போட்டிகள்   நடத்தப்படும்.


கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் பள்ளி மாணவர்கள், அவர்கள் பயிலும் பள்ளியின் தலைமையாசிரியரிடம் உரிய படிவத்தில் பரிந்துரை பெற்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு அனுப்ப வேண்டும்.  மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரால் முதற்கட்டமாக கீழ்நிலையில் போட்டிகள் நடத்தப்பட்டு அதனடிப்படையில் பரிந்துரைக்கப் பெறும் மாணவர்கள் மாவட்ட அளவிலான கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டியில் கலந்து கொள்ளலாம்.   இப்போட்டிகள் தொடர்பில் கூடுதல் விவரங்கள் பெறுவதற்கு 04546 – 251030 / 9159668240 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டியில்  பங்கு பெற்று வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.10,000/-, இரண்டாம் பரிசு ரூ.7,000/-, மூன்றாம் பரிசு ரூ.5,000/-, என்ற வகையில் காசோலைப் பரிசுகள், பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன என்று தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad