தேனியில் ஓ.பிஎஸ் தம்பி ஓ.சண்முக சுந்தரம் MC அவர்களின் 53வது பிறந்தநாள் விழா: தனியார் நட்சத்திர விடுதியில் எவிடன்ஸ் குழுமம் சார்பில் கொண்டாட்டம். - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 15 November 2023

தேனியில் ஓ.பிஎஸ் தம்பி ஓ.சண்முக சுந்தரம் MC அவர்களின் 53வது பிறந்தநாள் விழா: தனியார் நட்சத்திர விடுதியில் எவிடன்ஸ் குழுமம் சார்பில் கொண்டாட்டம்.




தேனி தனியார் நட்சத்திர விடுதியில் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அவர்களது சகோதரரும், பெரியகுளம் நகராட்சி நகர்மன்ற உறுப்பினருமான ஓ.சண்முக சுந்தரம் அவர்களது பிறந்தநாள் விழா எவிடன்ஸ் குழுமம் சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் கலந்து கொண்ட ஓ.சண்முக சுந்தரம் பேசியதாவது.., எனது 53வது பிறந்தநாள் விழா வினை தங்களுடன் கொண்டாடி மகிழ்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கின்றேன்.


மாண்புமிகு தமிழக முன்னாள் முதலமைச்சரும் எனது அண்ணனும், எனது அரசியல் ஆசானுமான அண்ணன் ஓ. பன்னீர்செல்வம் அவர்களது ஆசியுடன் எனது 53வது பிறந்தநாள் விழாவில் தங்களின் உள்ளார்ந்த அன்புகளினால், உளப்பூர்வமாக, வாழ்த்து மழையில் நான் முழுமையாக நனைந்துள்ளேன்.  என் மீது நீங்கள் கொண்ட அன்புக்கு என்றென்றும் நான் கட்டுப்பட்டவன் ஆவேன்.


பத்திரிகையாளர்களாகிய தாங்கள் எனக்கு பிறந்தநாள் விழாவினை முன்னெடுப்பது எனது அடுத்த கட்ட அரசியல் பயணம் மற்றும் தொழில் வளர்ச்சிக்கு மிகச்சிறந்ததாய் அமையும் என்பதில் சிறிதும் ஐயப்பாடு இல்லை.
தமிழகத்தில் எதிர்வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் புரட்சித்தங்கம் மாண்புமிகு ஓ. பன்னீர்செல்வம் அவர்களது தலைமையில் ஆட்சி அமைக்கப்படும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.


அவ்வாறு இருக்கும் பட்சத்தில் பத்திரிகையாளர்களுக்கு தேவையான அனைத்து விதமான நலத்திட்டங்கள், சலுகைகள் மற்றும் பத்திரிக்கையாளருக்கு கிடைக்கக்கூடிய பிரதி பலன்கள் உள்ளிட்ட அனைத்தும் கிடைத்திட மாண்புமிகு தமிழக  முதலமைச்சர் அவர்களிடம் எடுத்துக் கூறி அவற்றை திறம்படச் செய்திட வலியுறுத்துவேன் என இந்நன்னாளில் உறுதி அளிக்கின்றேன் என்று பேசியதோடு நாட்டின் நான்காவது தூணாக விளங்கும் பத்திரிகையாளர்கள் சார்பில் எனக்கு கிடைத்திருக்கும் இந்த உலக உத்தமர் விருது  மிகவும் பெருமையாக உள்ளது. 


வாழ் நாளில் நான் மக்களுக்கு தூய தொண்டாற்றிட  கடமைப்பட்டுள்ளேன்.இந்த விருது எனக்கு மிகப்பெரிய உந்து சக்தியாக அமையும் என்று நினைக்கின்றேன். இந்த விருதை எனக்கு வழங்கிய தமிழக பத்திரிகையாளர்கள் சங்கத்திற்கும் சங்கத்தின் மாநில தலைவர் உள்ளிட்ட பொறுப்பாளர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.என்று கூறியதோடு தமது பிறந்த நாளில் மத்திய மாநில அரசிற்கு சில கோரிக்கைகளை முன்வைத்தார்.


நாடு முழுவதும் பூரண மதுவிலக்கு மற்றும் புகையிலை,சிகரெட் போன்ற போதை  பொருட்களுக்கு தடை விதித்திட வேண்டும் எனவும், சிற்றுண்டிகள் மற்றும் பெரிய உணவகங்களில் சுகாதாரத்தை பேணி காத்திட வேண்டும் எனவும், தெருக்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் தேங்காமல் இருக்கும் வகையில் சாலைகள் அமைத்திட வேண்டும் எனவும்,தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள குளங்களை இரண்டு மீட்டர் அளவில் ஆழப்படுத்தி நல்ல முறையில் கரை அமைத்து  நிலத்தடி நீர்மட்டத்தினை உயர்த்திடும் வகையிலும், குடிநீர் தட்டுப்பாட்டினை போக்கும் வகையிலும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், திண்டுக்கல் முதல் லோயர் கேம்ப் வரை இரு வழித்தடங்களில் ரயில் சேவை அமைத்துக் கொடுத்து அப்பகுதியில் உள்ள மக்களின் விவசாய இடுபொருட்களை மற்ற மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு கொண்டு சென்று பயன்பெறும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமாய் தமது பிறந்த நாளன்று தமிழக அரசு மற்றும் மத்திய அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளார். 

No comments:

Post a Comment

Post Top Ad