தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 353 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 4 December 2023

தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 353 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.


தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில்  நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 353 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா, இ.ஆ.ப., அவர்கள் பொதுமக்களிடமிருந்து பெற்று கொண்டார்.

இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை வேண்டி, புதிய வீட்டுமனைப் பட்டா வேண்டி, வேலைவாய்ப்பு வேண்டி மற்றும் இதர மனுக்கள்  என மொத்தம் 353 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை வழங்கி மனுக்கள் மீது குறித்த காலத்திற்குள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.


முன்னதாக, மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பதற்கான சர்வதேச தினம்  (25.11.2023) முதல்  தொடங்கி சர்வதேச மனித உரிமைகள் தினம் டிசம்பர் 10-ம் தேதி வரை உள்ள 16 நாட்களுக்கும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் பொருட்டு விழிப்புணர்வு பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்ஒரு பகுதியாக, நேற்றைய தினம் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா, இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். 


இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி, மாவட்ட சமூக நல அலுவலர் செல்வி சியாமளா தேவி,  தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) திரு.ஜி.முரளி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவர் திருமதி இந்துமதி மற்றும் அரசு அலுவலர்கள்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad