தேனி அருகே பக்தர்களுக்கு இடையூறாக உள்ள மதுபான பாரை 8.நாட்களுக்கு இழுத்து மூட சிவசேனா கோரிக்கை. - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 17 March 2024

தேனி அருகே பக்தர்களுக்கு இடையூறாக உள்ள மதுபான பாரை 8.நாட்களுக்கு இழுத்து மூட சிவசேனா கோரிக்கை.

தேனி அருகே வீரபாண்டியில் கௌமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது இந்த கோவிலில் சித்திரை திருவிழா வருடம் தோறும் எட்டு நாட்கள் வெகு விமர்சியாக நடைபெறுவது வழக்கம் இந்த மதுபான பார் நெடுஞ்சாலையின் அருகில் அமைந்துள்ளது கோவில் திருவிழா நடைபெறும் காலங்களில் இந்த பாரை மூட வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு பலமுறை கோரிக்கை மனு அளித்தும் இன்று வரை நடவடிக்கை எடுக்காதது மிகவும் வேதனை அளிக்கின்றது.

திருவிழா நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகம் இருக்கும் என்பதால்தான் புறவழிச் சாலையில் இருந்து கோவிலுக்கு வரும் இந்த சாலையில் இரு சக்கர வாகனங்களை கூட அனுமதிப்பது கிடையாது அப்படி இருக்கையில் இந்த சாலையில் மதுபான பார் செயல்படுவது என்பது பக்தர்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் குறிப்பாக பெண் பக்தர்களிடையே பெரும் அச்சம் ஏற்படுகின்றது எனவே மாவட்ட நிர்வாகம் சிறப்பு கவனம் செலுத்தி பக்தர்களுக்கு இடையூறாக உள்ள மதுபான பாரை திருவிழா காலங்களில் எட்டு நாட்கள் இழுத்து மூட வேண்டும் என தமிழக அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் சிவசேனா கட்சியின் சார்பாக கோரிக்கையை சிவசேனா கட்சியின் மாநில துணைத் தலைவர் குரு. ஐய்யப்பன் விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad