தேனி பாராளுமன்ற தொகுதியில் டிடிவி தினகரன் போட்டியிட்டால் களத்தில் சந்திக்க தயார். திமு.க. வேட்பாளர் தங்கத்தமிழ்செல்வன் பேட்டி. - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 22 March 2024

தேனி பாராளுமன்ற தொகுதியில் டிடிவி தினகரன் போட்டியிட்டால் களத்தில் சந்திக்க தயார். திமு.க. வேட்பாளர் தங்கத்தமிழ்செல்வன் பேட்டி.


தேனி பாராளுமன்ற தொகுதியில்  டிடிவி. தினகரன் வேட்பாளராக போட்டியிட்டால், அவரை களத்தில் சந்திக்க தயார் என்று திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் ஆண்டிபட்டியில பத்திரிகையாளர் களிடம் கூறினார்.

தேனி பாராளுமன்ற தொகுதிக்கு திமுக வேட்பாளராக தங்க தமிழ்ச்செல்வன் அறிவிக்கப்பட்ட நிலையில் ஆண்டிபட்டியில் மகாராசன் எம்.எல்.ஏ.சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்களிடம் தங்க தமிழ்ச்செல்வன் பேட்டியில் கூறியதாவது, நான் தேனி பாராளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறேன். நாங்கள் தலைவர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியின் மூன்றாண்டு சாதனைகளை விளக்கி வாக்கு சேகரிப்போம் .ஒன்றியத்தில் பாரதிய ஜனதா கட்சியின் பாசிச ஆட்சியை வரக்கூடாது என்று கூறி வாக்கு சேகரிப்போம். 


எங்கள் தலைவரின் சிறப்பான தேர்தல் அறிக்கையை சொல்லி வாக்கு கேட்போம். மாநில உரிமைகளை திமுக அரசு பாதுகாக்கும் என்று கூறி வாக்கு கேட்போம் .பெத்த தாய் , தகப்பன் கூட செய்ய முடியாத  பெண்கள் உரிமை தொகையை மாதந்தோறும் ஆயிரம் வழங்கிய தமிழக முதல்வரின் சாதனை சொல்லி வாக்கு கேட்போம் .எனவே 40 தொகுதிகளிலும் நாங்கள் வெற்றி பெறுவது நிச்சயம் என்று கூறினார். மேலும் கூறும்போது இந்தியா கூட்டணி ஒன்றியத்தில் மட்டுமல்லாது, தமிழகத்திலும் 40 தொகுதிகளும் வெற்றி பெறுவோம். தேனி பாராளுமன்ற தொகுதியில் டிடிவி தினகரன் போட்டியிட்டால் களத்தில் சந்திக்க தயார் .அதனால் அதிக வாக்கு வித்தியாசத்தில் ஜெயிப்பேன் என்று கூறினார்.


நிகழ்சியில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார், ஆண்டிபட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜாராம், கடமலை மயிலை ஒன்றிய செயலாளர்கள் சுப்பிரமணி, தங்கப்பாண்டி, முன்னாள் எம்எல்ஏ ஆசையன், பேரூர் செயலாளர் சரவணன், பேரூர் சேர்மன் சந்திரகலா, மாவட்ட இளைஞர் நலன் விளையாட்டு துறை மேம்பாட்டு துணை அமைப்பாளர் சேது ராஜா மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் பிரகாஷ் இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் செஞ்சுரி செல்வம் மாவட்ட கவுன்சிலர் மகாராஜன் ஒன்றிய கவுன்சிலர்கள் வைரமுத்து செல்லம்புத்து செல்லத்துரை உள்ளிட்ட ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சார்ந்த நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad