ஆண்டிபட்டி சிலம்பு மஹாலில் தேன் சுடர் பெண்கள் இயக்கம் சார்பாக சர்வதேச பெண்கள் தின விழா. - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 10 March 2024

ஆண்டிபட்டி சிலம்பு மஹாலில் தேன் சுடர் பெண்கள் இயக்கம் சார்பாக சர்வதேச பெண்கள் தின விழா.


தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சிலம்பு மஹாலில் தேன் சுடர் பெண்கள் இயக்கம் சார்பாக சர்வதேச பெண்கள் தின விழா தலைவர் சரிதா தலைமையில் நடைபெற்றது.கலை நிகழ்ச்சிகளுடன் துவங்கிய விழாவில் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும், பாலின சமத்துவம், சம வேலைக்கு சம ஊதியம், பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்கு புதிய சட்டம் இயற்ற வேண்டும், ஏற்றத்தாழ்வில்லாத பாகுபாடற்ற சமத்துவ சமூகம் உருவாக வேண்டும் என்பது உட்பட பல்வேறு அம்சங்கள் வலியுறுத்தப்பட்டது. 

தேன்சுடர் பெண்கள் இயக்கம் சார்பாக நடத்தப்படும் தையல் பயிற்சி வகுப்பில் பயிற்சி நிறைவு பெற்ற 30 பெண்களுக்கு சான்றிதழ் வழங்கி மேடையில் கெளரவிக்கப்பட்டனர். மேலும் ஜீவன் டிரஸ்ட் இயக்குனர் ப.முருகேசன் அவர்களுக்கும் மற்றும்  சிலருக்கு சமூக செயல்பாட்டாளர் விருது வழங்கப்பட்டது.


விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக ஆண்டிப்பட்டி சேர்மன் சந்திரகலா பொன்னுத்துரை, முன்னாள் சேர்மன் ஆ.இராமசாமி, காவல் துணை கண்காணிப்பாளர் ராமலிங்கம் தேனி கலை பண்பாட்டு கழகம் பாண்டியராஜன், ஆரோக்கிய அகத்தின் இயக்குனர் சாபு சைமன் துணை இயக்குனர் டி.வி.முருகேசன், சமம் குடிமக்கள் இயக்க தலைவர் ராஜன், கவுன்சிலர் முத்துராமன், தேன் சுடர் பெண்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் லட்சுமி, கருத்தம்மா, காமுத்தாய், அருள்மொழி மற்றும் தேன்சுடர் பெண்கள் இயக்க செயலாக்க அலுவலர் அமுதா, ராஜாணி, சசிகலா, சரிகா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad