பெரியகுளத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க கோரி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம். - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 6 March 2024

பெரியகுளத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க கோரி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்.


தேனி மாவட்டம் பெரியகுளம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு உயர்நீதிமன்றத்தில் தமிழ் மொழியை வழக்காடு மொழியாக அறிவிக்கக் கோரி  வழக்கறிஞர்கள் சங்கம் பெரியகுளம் சார்பில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் போது பிகார், ராஜஸ்தான், உத்திரபிரதேசம், உள்ளிட்ட மாநிலங்கள் அந்தந்த மாநில மொழிகளை வழக்காடு மொழிகளாக கொண்டுள்ள நிலையில், கடந்த 2006ம்  சட்டமன்றத்தில் உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப் பட்டு குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக நிலுவையில் இருக்கும் இவற்றிற்கு மத்திய அரசு உடனடியாக தலையீடு செய்து சென்னை உயர்நீதிமன்றங்களில் தமிழ் மொழியை வழக்காடு மொழியாக அறிவித்திட நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி வழக்கறிஞர்கள் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்த ஆர்பாட்டத்திற்கு வழக்கறிஞர்கள் சங்கம் பெரியகுளம் தலைவர் எம். காமராஜ், செயலாளர் என். சுதாகரன் தலைமை தாங்கினார். பொருளாளர் ரத்தினவேல் பாண்டியன், மூத்த வழக்கறிஞர்கள் ஏ. ஜெயராமன், எஸ்.கே.டி.தாமரைச்செல்வன், முன்னிலை வகித்தனர். வழக்கறிஞர்கள் சுசி தமிழ் பாண்டியன், பரமேஸ்வரன், சுதாகர்,  குமரவேல், காமாட்சி, மதன், ஆதீஸ்வரன், செல்லப்பாண்டி, கதிர்வேல், ராம்பிரசாத், தவமணி ராஜன், ஜெயபால், அதிர்ஷ்ட குமார், சௌந்தர்ராஜ், கீதா, டி முருகன், சேதுராமன், முத்துக்குமார், கே முத்துக்குமார், சசிதரன் பாலசிங்கம், யோகமணி, ராஜி உட்பட வழக்கறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad