இதனால் கடந்தமூன்று மாதங்களாக பல்வேறு சிரமங்களை சந்தித்த வருவதாக கூறி குடியிருப்பு வாசிகள் ஆண்டிபட்டி பேரூராட்சி அலுவலக வளாகத்தில் அமர்ந்து போராட்டமும் அதையடுத்து சாலை மறியலிலும் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட காமராஜர் நகர் இரண்டாவது தெரு பகுதியில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக கழிவுநீர் வாய்க்கால் அரசு சார்பில் அமைக்கப்பட்டு சீராக கழிவு நீர் வெளியேற்றப்பட்டு வந்தது. இந்நிலையில் தனிநபர் ஒருவர் பொது கழிவுநீர் பாதையை அடைத்ததால் கழிவுநீர் வாய்க்கால் நிரம்பி தெருக்களில் குளம் போல கழிவுநீர் தேங்கியுள்ளது.
இதன் காரணமாக அங்கு குடியிருக்கும் குடியிருப்பு வாசிகளுக்கு பல்வேறு தொற்றுநோய் பாதிப்புகள் ஏற்பட்டு வருவதால் பாதையை அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் வாய்க்காலை அடைத்த தனிநபரிடம் கடுமையான வாக்குவாதம் செய்ததோடு இதற்கு உடனடி தீர்வு கான வலியுறுத்தி பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆண்டிபட்டி பேரூராட்சி அலுவலக வளாகத்திற்குள் வந்து அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆனால் பேரூராட்சி நிர்வாகம் தரப்பில் கழிவு நீர் வாய்க்காலை அடைத்த தனிநபர் வாய்க்கால் கட்டப்பட்ட இடம் தனது சொந்த இடம் என்று கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நடைபெற்று வருவதால், நடவடிக்கை எடுக்க முடியாது என தெரிவித்தனர். இதனால் கோபமடைந்த அப் பகுதி பொதுமக்கள் ஆண்டிபட்டி காவல் நிலையம் முன்பு மதுரை தேனி சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர் .இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களை ஆண்டிப்பட்டி காவல் நிலையம் அழைத்து வந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்களின் தொடர் போராட்டத்தால் ஆண்டிபட்டி நகரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment