தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சந்தைப்பேட்டை அருகே உள்ள 15 வது வார்டு அருள்மிகு சந்தன மாரியம்மன் ஆலய புணராவர்த்தன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது, விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் முதல் அணுக்கை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, பிரவேச பலி, கும்ப அலங்காரம் ஆகியவை செய்யப்பட்டு முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து நேற்று இரண்டாம் கால யாகசாலையை முன்னிட்டு விக்னேஸ்வர பூஜை, தீப பூஜை ,கோ பூஜை, பூர்ணாகுதி செய்து, தீபாராதனை காட்டப்பட்டு, யாகசாலையில் இருந்து மூல ஆலயத்திற்கும், விமான கோபுர கலசத்திற்கும் கடங்கள் புறப்பாடாகி விமான கலசத்திற்கு பல்வேறு புண்ணிய ஸ்தலங்களில் இருந்து கொண்டுவந்த பட்ட பூஜிக்கப்பட்ட நீர் அபிஷேகம் செய்யப்பட்டது .
அதனைத் தொடர்ந்து மூல ஆலய அம்மனுக்கு மஞ்சள் ,குங்குமம், பால், பழம் உள்ளிட்ட 21 வகை அபிஷேகங்கள் நடைபெற்று ,மகாதீப ஆராதனை காட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment