நாடு முழுவதும் நாளுக்கு நாள் வெயில் சுட்டெரித்து வெப்ப அலை வீசி வருகிறது. இதனால் பொதுமக்கள் நடமாட்டம் மிகக் குறைவாக காணப்படுகிறது. இந்நிலையில் கூலித்தொழிலாளர்கள் ,இருசக்கர வாகனத்தில் செல்வோர் ,பாதசாரிகள் வெயிலால் சிரமப்பட்டு வருகின்றனர்.
இவர்களின் சிரமத்தை போக்கும் வகையில் அதிமுகவின் பொது செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் ,நாடு முழுவதும் அதிமுகவினர் நீர் மோர் பந்தல் திறந்து பொதுமக்களுக்கு வழங்கி வருகிறார்கள் .
அதில் ஒரு அம்சமாக ஆண்டிபட்டியில் வைகை சாலை பிரிவு, எம்ஜிஆர் சிலை அருகே நேற்று காலை நீர் மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது .நிகழ்ச்சிக்கு அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளரும் ,யூனியன் துணை சேர்மனுமான வரதராஜன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார் .பேரூர் கழகச் செயலாளர் அருண்மதி கணேசன் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் ஷேட் அருணாசலம், ஒன்றிய கவுன்சிலர் சுமதி வடிவேல், பேரூராட்சி கவுன்சிலர் பாலமுருகன், அதிமுக பொருளாளர் லோகநாதன் மற்றும் நிர்வாகிகள் பாலச்சந்திரன், வீரக்குமார், சாம்சன், கவிராஜன், ரத்தன பாண்டி, பண்ணை தங்கராஜ், பிஆர்கே.கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மதுரை தேனி தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்ற நூற்றுக்கனக்கானோர் நீர் மோரை மகிழ்ச்சியுடன் வாங்கி பருகிச் சென்றனர்.
No comments:
Post a Comment