தேனி மாவட்டம் ஆண்டிபட்டி மெயின் ரோட்டில் அமைந்துள்ள வீர ஆஞ்சநேயர் கோவில் 61வது பொங்கல் நிறைவு விழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை வழிபாடு நடைபெற்றது.
இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி வழிபட்டனர். அப்போது ராமர் துதி, அனுமன் துதி, அம்மன் துதிகளை போற்றி பாடி குத்துவிளக்கிற்கு , குங்குமம் ,மஞ்சள் தெளித்து வழிபட்டனர். பெண்கள் தங்கள் பெற்றோர், கணவர், குழந்தைகள், உறவினர்கள் சகல பாக்கியங்களுடன் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என்று இந்த பூஜையின் போது வேண்டிக்கொண்டனர். நாட்டில் வெப்ப அலைகள் குறைந்து நல்ல மழை பெய்ய வேண்டும் என்று பூஜையின் போது வேண்டிக்கொண்டனர்.
பூஜையில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது .ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment