ஆண்டிபட்டி தி லிட்டில் பிளவர் பள்ளியின் சார்பாக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நீர் மோர் பந்தல் திறப்பு. - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 1 May 2024

ஆண்டிபட்டி தி லிட்டில் பிளவர் பள்ளியின் சார்பாக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நீர் மோர் பந்தல் திறப்பு.


நாடெங்கிலும் கோடை வெப்பம் அதிகரித்து, அனல் காற்று வீசுவதால் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். இந்நிலையில் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ரயில்வே பீடர் ரோட்டில் அமைந்துள்ள லிட்டில் பிளவர் பள்ளியின் முன்பாக, தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நீர் மோர் பந்தல் திறந்து பொதுமக்களுக்கு வழங்கினார்கள். 

நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் ஹென்றி அருளானந்தம் தலைமை தாங்கினார். பள்ளி நிர்வாகி தமயந்தி மற்றும் செயலர் மாத்யூ ஜோயல் முன்னிலை வகித்தனர். முதல்வர் உமா மகேஸ்வரி வரவேற்று பேசினார். சிறப்பு மருத்துவர் அன்பு குமார் மோர் பந்தலை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, பொதுமக்களுக்கு மோர் வழங்கி துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் 16 வது வார்டு கவுன்சிலர் சுரேஷ் பாண்டி, சமூக ஆர்வலர் மீனாட்சி சுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் அன்பு குமார், கோடையில் வெப்பத்தை தணிக்க பொதுமக்கள் உடலில் வெப்ப அளவை சமமாக வைத்துக்கொள்ள நீர், மோர், இளநீர் உள்ளிட்ட பானங்களை அருந்தி வெப்ப அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார். ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் சிறப்பாக செய்திருந்தனர் .நிகழ்ச்சியில் வாகன ஓட்டிகள், பாதசாரிகள், பேருந்து மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் நின்று மோர் வாங்கி ஆர்வமுடன் அருந்தி சென்றனர். 

No comments:

Post a Comment

Post Top Ad