ஆண்டிபட்டி மேலத்தெருவில் அமைந்துள்ள முனியாண்டி கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்தும் தீச்சட்டி எடுத்தும் ஆணி செருப்பு அணிந்தும் வேல் அலகு குத்தியும் நேர்த்திகடன் செலுத்தினர்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி நகரின் மையப்பகுதியில் உள்ள மேலத்தெருவில் அமைந்துள்ள காவல்தெய்வமான முனியாண்டி சுவாமி கோவில் சித்திரை திருவிழா மூன்று நாள் திருவிழாவாக வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது..
இந்நிலையில் திருவிழாவின் 2ம்நாள் நிகழ்ச்சியாக காப்பு கட்டி விரதம் இருந்த ஆண் பெண் பக்தர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் காவடி எடுத்தும் தீச்சட்டி எடுத்தும் ஆணி செருப்பு அணிந்தும் 2அடி முதல் 10அடி வரை உள்ள வேல் அலகு குத்தியும் தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தும் விதமாக ஆண்டிபட்டி நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து பின்னர் முனியாண்டி சுவாமி சன்னதியை அடைந்து முனிய்ண்டி சுவாமியை சாமி தரிசனம் செய்தனர்.
இந்த நிகழ்ச்சியின் போது ஏராளமான ஆண் பெண் பக்தர்கள் அருள்வந்து பக்தி பரவசத்துடன் ஆடி வந்தனர்.
No comments:
Post a Comment