வெண்டிக்காயில் விதை நேர்த்தி செய்யும் முறை வேளாண் கல்லூரி மாணவிகள் விளக்கம் - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 17 May 2024

வெண்டிக்காயில் விதை நேர்த்தி செய்யும் முறை வேளாண் கல்லூரி மாணவிகள் விளக்கம்

 


வெண்டிக்காயில் விதை நேர்த்தி செய்யும் முறை வேளாண் கல்லூரி மாணவிகள் விளக்கம்.



    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஒன்றிய கிராமங்களில் மதுரை வேளாண்மை கல்லூரி மாணவிகள் கிராம தங்கள் திட்டத்தின் கீழ் ,ஊரக வேளாண் பணி களை செய்து வருகின்றனர். ஆண்டிபட்டி ஒன்றியத்தில் உள்ள தர்மத்துப்பட்டி, மூணாண்டிபட்டி, அணைக்கரைப்பட்டி, பிச்சம்பட்டி, அழகாபுரி, தெப்பம்பட்டி, பாலக்கோம்பை உள்ளிட்ட பல கிராமங்களில் வெண்டி விவசாயம் நடந்து வருகிறது. வெண்டி விவசாயத்தில் அதிக மகசூல் கிடைப்பதற்காக அருகே உள்ள பிச்சம்பட்டி கிராமத்தில் விவசாயிகளை சந்தித்து மதுரை வேளாண்மை கல்லூரி மாணவி கவிபிரியதர்ஷினி, ஊரக வேளாண் பணி அனுபவ திட்டத்தின் கீழ் வெண்டியில் விதை நேர்த்தி செய்யும் முறையை செய்து காட்டினார்.வெண்டி விதையின் முளைப்புத்திரணை அதிகரிக்க அதனை கோமியத்தில் ஊற வைத்து பின்னர் விதைக்க வேண்டும் என்று எடுத்துரைத்தார். இது தங்களுக்கு பயனுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்

No comments:

Post a Comment

Post Top Ad