தக்காளியை தாக்கும் புகையிலை வெட்டுக் புழுக்களை கட்டுப்படுத்தும் முறை குறித்து வேளாண் கல்லூரி மாணவிகள் விளக்கம்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை சுற்றியுள்ள புள்ளிமான்கோம்பை, தர்மத்துப்பட்டி, நடுக்கோட்டை, மூணாண்டிபட்டி , போடி தாசன் பட்டி, அழகாபுரி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் தக்காளி நடவு பணிகள் முடிவடைந்து, செடி நல்ல முறையில் வளர்ந்து பலன் கொடுக்கும் நிலையில் உள்ளது. இந்நிலையில் தக்காளி செடியில் புகையிலை வெட்டுப் புழுக்கள் அதிகரித்து, நோய் தாக்கத்தை உண்டு பண்ணி உள்ளது. இதனால் விளைச்சல் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் கூறினர். இந்நிலையில் மதுரை வேளாண் கல்லூரியை சேர்ந்த ஆரத்தி நாயர் என்ற மாணவி போடிதாசன் பட்டிக்கு சென்று, விவசாயிகளுடன் பணி அனுபவத் திட்டத்தின் கீழ் கலந்துரையாடி , புகையிலை வெட்டு புழுக்களை கட்டுப்படுத்த பயன்படும் நியுக்ளியர் பாலி ஹெட்ரோசிஸ் வைரஸை பயன்படுத்தும் முறை குறித்து செயல் விளக்கம் அளித்தார். இது தங்களுக்கு பயனுள்ளதாக இருந்ததாக விவசாயிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment