ஆண்டிபட்டி பகுதியில் பார்த்தீனியம் செடிகளை எவ்வாறு அழிப்பது என்பது குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 19 May 2024

ஆண்டிபட்டி பகுதியில் பார்த்தீனியம் செடிகளை எவ்வாறு அழிப்பது என்பது குறித்து விவசாயிகளுக்கு விளக்கம்

 


ஆண்டிபட்டி பகுதியில் பார்த்தீனியம் செடிகளை எவ்வாறு அழிப்பது என்பது குறித்து விவசாயிகளுக்கு விளக்கம்.


    தமிழகம் முழுவதும் உள்ள விவசாய நிலங்களில் விவசாயத்திற்கு எதிராக, சவால் விட்டுக் கொண்டிருக்கும் பார்த்தீனியம் செடியால் ,விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் திணறி வருகின்றனர்.


 இந்நிலையில் கடந்த பல ஆண்டுகளாக தமிழக அரசு வேளாண் கல்லூரிகள், வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை உள்ளிட்ட பல்வேறு விவசாயம் சார்ந்த அலுவலகங்களைக் கொண்டு பார்த்தீனிய செடியை அழிக்க வேண்டும் என்று ஒரு தீவிர இயக்கத்தை அரசு மேற்கொண்டு நடத்தி வருகிறது. இருந்தாலும் பார்தீனியம் செடியினுடைய வளர்ச்சி முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. மேலும் இந்த பார்த்தீனியம் செடியை சுவாசிப்பதன் மூலம் மக்களுக்கு ஆஸ்துமா உள்ளிட்ட நோய் பரவும் அபாயமும் உள்ளது. 


            எனவே பல கட்டங்களாக பார்த்தீனியம் செடியை வேரோடு அழிக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது .அந்த வகையில் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே  உள்ள முல்லையம்பட்டி கிராமத்தில், மதுரை வேளாண்மை கல்லூரி மாணவி கவிப்பிரியதர்ஷினி, ஊரக வேளாண் பணி அனுபவ திட்டத்தின் கீழ்,பார்த்தீனியம் களை குறித்து எடுத்துரைத்தார்.


மேலும் பார்த்தீனியம் களையின் பண்புகள், தீமைகள்,மற்றும் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் பற்றி விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad