ஆண்டிபட்டி அருகே தென்னை மரத்தில் பூச்சி மேலாண்மை குறித்து மதுரை வேளாண் கல்லூரி மாணவி விளக்கம் .
மதுரை வேளாண் கல்லூரியைச் சேர்ந்த மாணவிகள் கிராம தங்கள் திட்டத்தின் கீழ் ,தேனி மாவட்டம், ஆண்டிபட்டி ஒன்றிய பகுதிகளில் தங்கி இருந்து, விவசாயிகளை சந்தித்து விவசாயம் சார்ந்த சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொண்டும் , விவசாயிகளுக்கு பல்வேறு விதமான நவீன யுக்திகளை எடுத்துரைத்தும் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
ஆண்டிபட்டி ஒன்றியத்தில் புள்ளிமான் கோம்பை, நடுக்கோட்டை, அணைக்கரைப்பட்டி, திம்மரச நாயக்கனூர், மறவபட்டி, அழகாபுரி, பாலக்கோம்பை உள்ளிட்ட இடங்களில் விவசாயிகள் அதிகளவில் தென்னை பயிர் செய்துள்ளனர். தற்போது தென்னை மரங்களில் பூச்சி தாக்கி ,மரங்களுக்கு சேதாரத்தை உண்டாக்கி ,தென்னை காய்கள் அதிக அளவில் உற்பத்தியாவது பாதிக்கப்படுகிறது.
இந்நிலையில் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள மறவபட்டியில் மதுரை வேளாண்மை கல்லூரி மாணவி ஆரத்தி நாயர் தென்னையில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். அது விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக தெரிவித்தனர்.
No comments:
Post a Comment