தென்னையில் தாக்கும் காண்டாமிருக வண்டு மேலாண்மை குறித்து மதுரை வேளாண் கல்லூரி மாணவர்கள் விளக்கம் .
ஒவ்வொரு ஆண்டும் மதுரை வேளாண் கல்லூரியில் படிக்கும் இறுதி ஆண்டு மாணவர்கள் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் ,பல்வேறு கிராமங்களில் தங்கியிருந்து ,விவசாயிகளுடன் கலந்துரையாடி ,அவர்களிடம் இருந்து பல்வேறு விஷயங்களை தெரிந்து கொண்டும், விவசாயத்தில் புது யுக்திகளை அவர்களுக்கு விளக்கியும் பயிற்சி மேற்கொள்வர்.
அந்த வகையில் மதுரை வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் படித்து வரும் இளங்கலை நான்காம் ஆண்டு மாணவன் கெவின் ஜி ஷைஜு நிலக்கோட்டை அருகில் நூத்தலாபுரம் என்னும் கிராமத்தில் ஊரக வேளாண்மை பணி அனுபவத் திட்டம் 2024 இல் கீழ் விவசாய பெருமக்களுக்கு தென்னையில் காண்டாமிருக வண்டு மேலாண்மை பற்றி எடுத்துரைத்தார்.மேலும் அதற்கான துண்டுப் பிரசுரங்களை விவசாயிகளுக்கு வழங்கினார். இது தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக விவசாயிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment