பாப்பம்மாள்புரம் பகவதி அம்மன் கோவில் சித்திரைத் திருவிழா கோலாகலம்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சி பாப்பம்மாள்புரம், 3வது வார்டில் அமைந்துள்ள அருள்மிகு பகவதி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கோலாகலமாக நடந்து வருகிறது. ஊர் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டுள்ளது.
விழாவை ஒட்டி நேற்று முன்தினம் அம்மன் உற்சவ மூர்த்தி சகல வாத்தியங்களுடன், அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் பவனி வர, வைகை அணையில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர், திருமஞ்சன கூடத்தில் நிரப்பப்பட்டு ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்துவரப்பட்டது. அதனைத் தொடர்ந்து அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது .விழாவை முன்னிட்டு பெண்களுக்கான கோலப்போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. முதல் நாளில் மாபெரும் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து நேற்று பெண்கள் கோவில் முன்பாக பொங்கல் வைத்து தங்கள் நேத்திக் கடனை நிறைவேற்றிக் கொண்டனர். இதனை அடுத்து குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக இசை நாற்காலி, உறியடித்தல் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது .மாலை விரதம் இருந்த பக்தர்கள் தீச்சட்டி எடுத்தும் ,காவடி எடுத்தும் ஊர்வலமாக வந்து தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றிக் கொண்டனர். நேற்று இரவு அரசு முதல் தர ஒப்பந்ததாரர் தர்மராஜ் ஈஸ்வரி முருகன் குடும்பத்தார் சார்பாக மாபெரும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை தலைவர் வெங்கடேசன், செயலாளர் ஜெய்சங்கர், பொருளாளர் ஜெகநாதன் உள்ளிட்ட விழா குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.
No comments:
Post a Comment