பருத்தியில் விதை நேர்த்தி தயாரிக்கும் செயல்முறை பயிற்சி விளக்கம் அளித்த மதுரை வேளாண் கல்லூரி மாணவிகள் - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 8 May 2024

பருத்தியில் விதை நேர்த்தி தயாரிக்கும் செயல்முறை பயிற்சி விளக்கம் அளித்த மதுரை வேளாண் கல்லூரி மாணவிகள்

 


பருத்தியில் விதை நேர்த்தி தயாரிக்கும் செயல்முறை பயிற்சி விளக்கம் அளித்த மதுரை வேளாண் கல்லூரி மாணவிகள் .


தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள பிச்சம்பட்டி கிராமத்தில் மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பயிலும் மாணவி ஜெயரஞ்சனி ஊரக வேளாண் பணி அனுபவத்திட்டத்தின் கீழ் பருத்தியில் ஏற்படும் நோய் பற்றி விதை நேர்த்தி செய்து காட்டி அதன் பயன்பாட்டை எடுத்துரைத்தார்.


    விதை நேர்த்தி செய்யும் போது வேப்பெண்ணை 3 சதவிகிதம் பருத்தி விதையில் கலந்து, 10முதல் 15 நிமிடம் வரை ஊற வைக்க வேண்டும். பின்னர் அவற்றுடன் மாட்டு சாணம் கலந்து வெயிலில் காய வைக்க வேண்டும். அதன் பிறகு விதையை பயன்படுத்தலாம் .இவ்வாறு விதை நேர்த்தி செய்து, பருத்தி விதையை பயன்படுத்துவதால் பருத்தியில் ஏற்படும் சாறு உறிஞ்சும் பூச்சி, இலை சுற்றும் பூச்சி, தண்டு துளைப்பான் ஆகிய நோய்களிலிருந்து பருத்திச் செடியை காப்பாற்றலாம் என்று விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad