தேனி மாவட்டம் தேனிகிராண்ட் மாஸ்டர் செஸ் அகாடமி சார்பில் சர்வதேச சதுரங்க தினத்தை முன்னிட்டு 56-வது மாவட்ட அளவிலான செஸ் போட்டி - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 22 July 2024

தேனி மாவட்டம் தேனிகிராண்ட் மாஸ்டர் செஸ் அகாடமி சார்பில் சர்வதேச சதுரங்க தினத்தை முன்னிட்டு 56-வது மாவட்ட அளவிலான செஸ் போட்டி


தேனி மாவட்டம் தேனிகிராண்ட் மாஸ்டர் செஸ் அகாடமி சார்பில் சர்வதேச சதுரங்க தினத்தை முன்னிட்டு 56-வது மாவட்ட அளவிலான செஸ் போட்டியும், மாநில செஸ் போட்டிகளில் வெற்றி பெற்று, தேசிய போட்டிகளுக்கு செல்லவுள்ள மாணவர்களுக்கு பாராட்டு விழாவும் தேனி வெஸ்ட்ரன் ஹாட்ஸ் ஹோட்டலில் இன்று 21.07.24 அகாடமி பொருளாளர் ஆசிரியர் S. கணேஷ் குமார் தலைமையிலும் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முனைவர் C. குபேந்திரன் அவர்கள் முன்னிலையிலும் நடை பெற்றது, விழாவினை தேனி மாவட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் பார்த்தீபன்  அவர்கள் துவங்கி வைத்து மாநில அளவில் சாதனை புரிந்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்தினார், முன்னதாக அகாடமி தலைவரும், தமிழ்நாடு மாநில சதுரங்க நடுவருமானா S. சையது மைதீன் வரவேற்றார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை அகாடமி இயக்குனர் S. அஜ்மல்கான் செய்திருந்தார், நடுவர்களாக R. தேனழகன், K. மேனகா,S. நூர்ஜஹான், A. விஷால் ஆகியோர் செயல்பட்டனர். சிறப்பு விருந்தினர்களாக S. அமானுல்லா, வனசரகர் (ஓய்வு) டாக்டர்கள்.அறவாழி, பிரபாகரன், சரவணன், லயன்ஸ் கிளப்பை சார்ந்த சாய் வெங்கடேசன், வீரராஜ், முருகன், ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினர். வெற்றி பெற்றோர் விபரம்.  Under - 8 பிரிவில் 1.A. லோகேஷ் கிருஷ்ணா, 2. B.ஹனிசாக்கிதா 3, A. நித்தின்ராஜ் 4.N. மோனிஷா 5, R. சர்வேஷ் 6, S. சிந்து ஜஸ்வின் 7.D. கிர்த்திக்  8, VL. ஆதேஸ் கிர்திக் 9. S. சாய் கிருஷ்ணா 10, B. ஹரினி ஶ்ரீ ஆகியோரும் Under - 10 பிரிவில் 1.J. தியாஸ்ரீ  2, R. செல்வ நிரன்ஜன் 3,S.ஆக்னேயா 4, R. இஷான் 5. M. தேஹந் 6, ஹரிஷ் ரக்சன் 7, J. சுபவர்ஸ்னி 8,S. சர்வேஷ்வர். 9, N. சாய் சரவணா 10. S.J. தேவாங் ஆகியோரும் Under-12 பிரிவில் 1, ஜோ இன்பென்ட் 2,P. ஹர்ஷித் 3, R. சாத்வீகா 4, M.கவின் கண்ணன் 5.V. ஸ்ரீ கீர்த்திகா 6, A. ஸ்ரீசரன் 7, P.K. தன்யஸ்ரீ 8,E. கவிரத்தினம் 9, V ஹர்சினி 10, S. ஜெய் ஹர்சினி ஆகியோரும் Under-15 பிரிவில்1.S பரணி 2, V. தரணிக்காஸ்ரீ 3, N ராஜாமுகமது 4,Aதிருகார்த்திக் 5, S. வர்ஸ்னிப்ரியா 6, S.நாகபிரனேஷ் 7, J.சன்ஜெய்குமார் 8, B. சுஜய் 9,P. பிரிதிவ் பாண்டியன், 10, P. ப்ரேம் ஆகியோரும் வெற்றி பெற்றனர். சிறந்த பள்ளிகளுக்கான விருது கொடுவிலார்பட்டிதேனி கம்பவர் சங்க பப்ளிக் பள்ளி, லட்சுமிபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் ரேணுகா வித்தியாலயா பள்ளிக்கும், K.லட்சுமிபுரம் அரசு தொடக்கப் பள்ளிக்கும், முத்துதேவன்பட்டி நாடார் சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலை பள்ளிக்கும், தேனி தி லிட்டில் கிங்டம் பள்ளிக்கும் வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment

Post Top Ad