ஆண்டிபட்டியில் உள்ள காமராஜர் சிலைக்கு திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை .
ஆண்டிபட்டி, ஜூலை .16 - தமிழக அரசு முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில் முன்னாள் முதல்வர் கர்மவீரர் காமராஜரின் 122 வது பிறந்த நாளை முன்னிட்டு ஆண்டிபட்டியில் உள்ள காமராஜர் சிலைக்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர்களும், அமைப்பினரும் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினார்கள் .நிகழ்ச்சியில் ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் தலைமை தாங்கி காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தார் .காங்கிரஸ் கட்சியின் வட்டார தலைவர் ராஜேஷ் கண்ணன், நகர தலைவர் சுப்புராஜ் ஆகியோர் வரவேற்றனர். நிகழ்ச்சியில் திமுக சார்பில் கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜாராம் ,நகர செயலாளர் சரவணன், பேரூராட்சி கவுன்சிலர்கள் சரவணன், சுரேஷ் ,முத்துராமன், முன்னாள் பேரூராட்சி தலைவர் வஜ்ரவேல் ஆகியோரும்,காங்கிரஸ் கட்சி சார்பில் வட்டார செயலாளர் பாலமுருகன், நகர செயலாளர் ராஜாராம் மற்றும் நிர்வாகிகள் ரத்தினவேல், அமாவாசை, மூவேந்திரன் ,வேலுமணி உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டு காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment