ஆண்டிபட்டியில் வட்டார களஞ்சியம் பெண்கள் கூட்டமைப்பினர் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் பொதுக்குழு கூட்டம். - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 30 July 2024

ஆண்டிபட்டியில் வட்டார களஞ்சியம் பெண்கள் கூட்டமைப்பினர் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் பொதுக்குழு கூட்டம்.

 


ஆண்டிபட்டியில்  வட்டார களஞ்சியம் பெண்கள் கூட்டமைப்பினர் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் பொதுக்குழு கூட்டம்.


ஆண்டிபட்டி, ஜுலை. தேனிமாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வட்டார அளவிலான களஞ்சியம் பெண்கள் கூட்டமைப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.


முன்னதாக ஆண்டிபட்டி காவல்துறை துணை கண்காணிப்பாளர் சண்முகசுந்தரம் கொடி அசைத்து துவக்கி வைத்த ஊர்வலத்தில் , கூட்டமைப்பைச் சார்ந்த பெண்கள் டிரம் செட் முழங்க , முளைப்பாரிகளை  சுமந்து ,தேவர்சிலை அருகில் இருந்து  புறப்பட்டு வந்து மதுரை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தை அடைந்தனர்.


பொதுக்குழு கூட்டத்தை ஆண்டிபட்டி காவல் ஆய்வாளர் நாகராணி, களஞ்சியம் வட்டாரத் தலைவி முத்துமாரி, செயற்குழு உறுப்பினர்கள் சுகந்தி, சர்வேஸ்வரி, சீதா ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். விழாவில் இந்தியன் வங்கி உதவி மேலாளர் திருப்பதி, உதவி வேளாண் அலுவலர் குமரேசன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். களஞ்சியம் அமைப்பின் செயல்பாடுகள் குறித்து வட்டார ஒருங்கிணைப்பாளர் டயானா எடுத்துரைத்தார். நிதிநிலை அறிக்கையை மகாலட்சுமி மற்றும் வட்டாரத் தலைவி முத்துமாரி ஆகியோர் வாசித்தனர். உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் செயல்பாடுகள் பற்றி முதன்மை நிர்வாக அலுவலர் ராமசாமி விளக்கி பேசினார்.

 

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தேனி மண்டல ஒருங்கிணைப்பாளர் வித்யா, வட்டார பணியாளர்கள் கவிதா, கலைச்செல்வி, சுமித்ரா, சித்ரா, அனுஷா, பாரதி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.


 கூட்டத்தில் காவல்துறை கண்காணிப்பாளர் சண்முகசுந்தரம் பேசும்போது பெண்கள் பேருந்துகளில்  செல்லும் போதும் ,பொது இடங்களில் செல்லும்போதும் ,கட்டைப்பையில் வைத்து நகைககளை கொண்டு செல்லக்கூடாது என்றும் ,  கவனமாக இருக்க வேண்டும் என்றும் ,  செல்போனை சரியான முறையில் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த வேண்டும் என்றும்  , தவறான வழியில் பயன்படுத்தக்கூடாது என்றும் தங்களது பாதுகாப்புக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி பேசினார்.

No comments:

Post a Comment

Post Top Ad