ஆண்டிபட்டி ஒன்றியத்தில் மக்களுடன் முதல்வர் திட்டம் முகாம். - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 2 August 2024

ஆண்டிபட்டி ஒன்றியத்தில் மக்களுடன் முதல்வர் திட்டம் முகாம்.


ஆண்டிபட்டி ஒன்றியத்தில் மக்களுடன் முதல்வர் திட்டம் முகாம். 


ஆண்டிபட்டி ஒன்றிய பகுதியில் உள்ள 6 கிராம ஊராட்சிகளுக்கு நேற்று நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் எம்எல்ஏ மற்றும் கலெக்டர் ஆகியோர் பார்வையிட்டு பயனாளிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கினார்கள். 


ஊரக பகுதிகளில் மக்களுடன் முதல்வர்‌ திட்டம் அன்றாடம் பொதுமக்கள் அதிகமாக அணுகும் 18 அரசுத்துறைகள் சார்ந்த கோரிக்கைகளை ஒரே குடையின் கீழ் பெற தேனி மாவட்டத்தில் உள்ள 8 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 130 கிராம ஊராட்சிகளில் 31 சிறப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு கடந்த மாதம் 11ம்‌ தேதி முதல் தொடர்ந்து முகாம்கள் நடத்தப்பட்டு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று ஆண்டிபட்டி ஒன்றியத்தில் உள்ள பிச்சம்பட்டி, கன்னியப்பபிள்ளைபட்டி, கோத்தலூத்து, கொத்தப்பட்டி, கதிர்நரசிங்கபுரம்,‌ ரெங்கசமுத்திரம் உள்ளிட்ட 6 கிராம் ஊராட்சிகளை சேர்ந்த மக்களுக்காக மக்களுடன் முதல்வர் திட்டம் முகாம் ஆண்டிபட்டி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்தத் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மின்சார வாரியம், வருவாய்த்துறை, வேளாண்மை துறை, மாற்றுத்திறனாளிகள் துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை, உள்ளிட்ட 15 துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் நடக்கும் முகாமினை ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர். மனு அளித்து உடனடியாக தீர்வு காணப்பட்ட பயனாளிகளுக்கு எம்எல்ஏ மகாராஜன் மற்றும் கலெக்டர் ஷஜீவனா ஆகியோர் சான்றிதழ்களை வழங்கினார்கள். இந்த முகாமில் வட்டார வளர்ச்சி அலுவலர் போஸ், ஆண்டிபட்டி தாசில்தார் கண்ணன், திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜாராம், பேரூர் செயலாளர் சரவணன் மற்றும் கிராம ஊராட்சி செயலர்கள் வருவாய்த்துறை அதிகாரிகள், துறை சார்ந்த அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad