ஆண்டிபட்டியில் தூய அடைக்கல மாதா கற்கோவில் இரண்டாம் ஆண்டு திருவிழா மற்றும் தேர் பவனி.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தேசிய நெடுஞ்சாலை அருகே பழமை வாய்ந்த தூய அடைக்கல மாதா ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயம் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு புதுப்பிக்கப்பட்டு கற்கோவிலாக மாற்றம் செய்யப்பட்டு, அர்சிப்பு பெருவிழா நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக நேற்று ஆலயத்தில் திருப்பலி நடைபெற்று ,அதனைத் தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அடைக்கலமாதா தேர் பவனியாக ஆண்டிபட்டியின் முக்கிய வீதிகள் வழியாக வந்தது. அப்போது கிறிஸ்தவர்கள் ஜெபம் மற்றும் பாடல்கள் பாடி ஊர்வலமாக வந்தனர். நிகழ்ச்சியில் பங்குத்தந்தை முத்து தலைமையில், சேவா மிஷனரி சகோதரிகள் மற்றும் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment