ஆண்டிபட்டி பால விநாயகர் கோவிலில் 48வது நாள் மண்டலபூஜை
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள ஸ்ரீ பால விநாயகர் கோவிலில் 48வது நாள் மண்டல பூஜை நடைபெற்றது.
பழமை வாய்ந்த இக்கோவிலில் கும்பாபிஷேகம் கடந்த ஜூலை மாதம் 12ஆம் தேதி நடைபெற்றது.
அதையடுத்து கும்பாபிஷேகம் முடிந்தநாள் முதல் நேற்று முன்தினம் வரை ஒவ்வொரு நாளும் பல்வேறு பூஜைகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் நேற்று 48 வது நாள் மண்டல பூஜை நடைபெற்றது.
இதையடுத்து யாகசாலை பூஜைகள் சிவாச்சாரியார்கள் மந்திரம் ஓத ஆகம விதிப்படி நடைபெற்றன. இதில் பல்வேறு புண்ணிய தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் பூஜிக்கப்பட்டு, கடங்கள் புறப்பாடாகி கோவிலை வலம் வந்து, மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது .தொடர்ந்து மகா அபிஷேகமும் ,கலசாபிஷேகமும் நடைபெற்று, மகா தீபாராதனை காட்டப்பட்டது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
முன்னதாக நேற்று முன்தினம் எஜமான் பாண்டி முனீஸ்வரர் தலைமையில் திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment