கன்னியப்பபிள்ளைபட்டியில் ஆண்டிபட்டி ஒன்றிய அளவிலான குறுவட்ட விளையாட்டு போட்டி.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஒன்றியம் பள்ளி மாணவர்களுக்கு இடையேயான குறுவட்ட விளையாட்டுப் போட்டிகள் கன்னியப்பபிள்ளை பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் தி.சுப்புலாபுரம் அரசு மேல்நிலை பள்ளி சார்பாக நடத்தப்பட்டது. தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பா. இந்திராணி, மாவட்ட கல்வி அலுவலர் வசந்தா ,மாவட்ட கல்வி அலுவலர் கோவிந்தன் (தனியார் பள்ளிகள்) ஆகியோர் போட்டிகளை துவக்கி வைத்தனர். தேனி மாவட்ட உதவி தொடக்க கல்வி அலுவலர் (பொறுப்பு) ஜான்சன். தி .சுப்புலாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மகேஷ் மற்றும் முன்னாள் மாணவர் ராமராஜ் ஆகியோர் ஒலிம்பிக் தீபம் ஏற்றி வைத்தனர். பள்ளியின் ஆசிரியர்கள் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினர் .ஆண்டிபட்டி ஒன்றியத்தைச் சேர்ந்த 27 பள்ளிகளின் மாணவர்கள் போட்டிகளில் கலந்து கொண்டனர் .அனைத்து பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் விளையாட்டு ஆசிரியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment