ஆண்டிபட்டி பேரூராட்சி என்.ஜி.ஓ.நகரில் வசிக்கும் குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்காமல் பேரூராட்சி நிர்வாகம் அலட்சியம் .அப்பகுதி மக்கள் புகார் - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 28 September 2024

ஆண்டிபட்டி பேரூராட்சி என்.ஜி.ஓ.நகரில் வசிக்கும் குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்காமல் பேரூராட்சி நிர்வாகம் அலட்சியம் .அப்பகுதி மக்கள் புகார்

 


ஆண்டிபட்டி பேரூராட்சி என்.ஜி.ஓ. நகரில் வசிக்கும் குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்காமல் பேரூராட்சி நிர்வாகம் அலட்சியம் .அப்பகுதி மக்கள் புகார்.


    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது. இதில் பதினெட்டாவது வார்டு என்.ஜி. ஓ .நகரில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதி பேரூராட்சி இணைப்பில் இருந்தாலும், ஒரு சில வீடுகள் மட்டும் அருகாமையில் உள்ள அனுப்பபட்டி ஊராட்சியில் உள்ளது. எனவே அப்பகுதி மக்களுக்கு பேரூராட்சி சார்பாக எந்தவித உதவிகளும் செய்ய முடிவதில்லை. அதே போல் அனுப்பபட்டிஊராட்சி நிர்வாகமும் இவர்களை கண்டு கொள்வதில்லை .இதனால் அப்பகுதி மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.


    இதனால் அப்பகுதி மக்கள் குடிநீர் இல்லாமல் பரிதவித்து வந்தனர். இது குறித்து பேரூராட்சி நிர்வாகத்தில் பலமுறை தங்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஆனால் பேரூராட்சி நிர்வாகம் அனுப்பபட்டி ஊராட்சிக்கு நீங்கள் செல்லுங்கள் என்று திருப்பி அனுப்பி விடுகின்றனர்.


   இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, நாங்கள் ஏதோ வேற்று மாநில பிரஜைகள் மாதிரி கருதிக்கொண்டு எங்களை அலைக்கழிப்பு செய்கிறார்கள் .ஆனால் அதே சமயம் இப்பகுதி உள்ள ஒரு சிலருக்கு மட்டும் பேரூராட்சி நிர்வாகம் குடிநீர் இணைப்பு வழங்கி உள்ளது. இது எந்த வகையில் நியாயம். குடிநீர் இணைப்பு வழங்கினால் அனைவருக்கும் பொதுவாக வழங்க வேண்டும் என்று தெரிவித்து பேரூராட்சிக்கு நிர்வாகத்திற்கு புகார் அளித்துள்ளனர். இது குறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து இப்பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டுமாய் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad