ஆண்டிப்பட்டி அருகே கன்னியாகுமரி பகுதியில் இருந்து பள்ளி மாணவ மாணவிகளை சுற்றுலாவுக்கு அழைத்து வந்த பேருந்து கவிழ்ந்து விபத்து. 15 மாணவர்களுக்கு காயம் - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 28 September 2024

ஆண்டிப்பட்டி அருகே கன்னியாகுமரி பகுதியில் இருந்து பள்ளி மாணவ மாணவிகளை சுற்றுலாவுக்கு அழைத்து வந்த பேருந்து கவிழ்ந்து விபத்து. 15 மாணவர்களுக்கு காயம்

 


ஆண்டிப்பட்டி அருகே கன்னியாகுமரி பகுதியில் இருந்து பள்ளி மாணவ மாணவிகளை சுற்றுலாவுக்கு அழைத்து வந்த பேருந்து கவிழ்ந்து விபத்து. 15 மாணவர்களுக்கு காயம்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே குன்னூர் பகுதியில் கன்னியாகுமரி பகுதியில் இருந்து பள்ளி மாணவிகளை சுற்றுலாக்கு அழைத்து வந்த பேருந்து கவிழ்ந்து காயங்களுடன் 15-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மற்றும் 2ஆசிரியர்கள் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்


கன்னியாகுமரி மாவட்டம் காப்புக்காடு பகுதியில் செயல்படும் தனியார் மெட்ரிக் பள்ளியில் இருந்து காலாண்டு தேர்வு விடுமுறையை முன்னிட்டு நேற்று 90க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளை அழைத்துக் தேனி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தளங்களுக்கு இரண்டு பேருந்துகளில் அழைத்து வந்தனர். 


நேற்று அதிகாலை சுமார் 5 மணி அளவில் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை அடுத்துள்ள குன்னூர் டோல்கேட் பகுதியில் வந்து கொண்டிருந்த போது 46மாணவர்களை ஏற்றி கொண்டு வந்த ஒரு பேருந்து  


 டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையை  விட்டு இறங்கி வயலுக்குள் தலை குப்புற கவிழ்ந்தது. 


அதிகாலை நேரம் என்பதால் அப்போது   பேருநதில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் திடீரென பஸ் கவிழ்ந்தால் அலறியபடி கூச்சலிட்டனர்.  


அப்போது இந்த சம்பவத்தை  கண்ட அப்பகுதி மக்கள் மற்றும் மற்றொரு பேருந்தில் வந்தவர்களும் உடனடியாக கவிழ்ந்த பேருந்திலிருந்து காயம் அடைந்த மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்களை பத்திரமாக மீட்டனர். 


இந்த விபத்தில் காயம் அடைந்த சுமார் 15-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்களை ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 


இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த க.விலக்கு போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad