ஆண்டிபட்டியில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தேசிய நெடுஞ்சாலை எம்ஜிஆர் சிலை முன்பு இந்து முன்னணி இயக்கத்தின் சார்பில் 31வது ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது .விழாவை முன்னிட்டு அங்கு அமைக்கப்பட்டு இருந்த பிரத்தியேக மேடையில் வீர விநாயகர் சிலை வைக்கப்பட்டது. முன்னதாக யாகசாலை பூஜைகள் நடந்து, பூர்ணாகுதி செய்யப்பட்டு, விநாயகர் சிலைக்கு கண் திறக்கப்பட்டு, அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் ஆச்சி கார்த்திக் தலைமை தாங்கினார். நகர பொதுச்செயலாளர் பகவதி ராஜ்குமார், ஒன்றிய பொதுச் செயலாளர் செந்தில் ஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக பாக்யா ராமச்சந்திரன் கலந்துகொண்டு வாழ்த்தி பேசினார்.மேலும் நிகழ்ச்சியில் ஒன்றிய பொறுப்பாளர்கள் லோகேஸ்வரன், முருகன் ,ஒன்றிய செயலாளர் அருண்குமார், பாரதிய ஜனதா கட்சி நிர்வாகி வழக்கறிஞர் குமார் உள்பட அமைப்பினர் ஏராளமானார் கலந்து கொண்டனர் ,நிகழ்ச்சியை முன்னிட்டு பொங்கல் ,சுண்டல் ,புளியோதரை பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து நகரின் பல பகுதிகளிலும் கிராமங்களிலும் வீர விநாயகர், வெற்றி விநாயகர், வழிகாட்டி விநாயகர் ,கல்யாண விநாயகர் உள்ளிட்ட பல்வேறு சிலைகள் வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டது.
No comments:
Post a Comment