ஆண்டிபட்டியில் விநாயகர் சதுர்த்தி விழா செல்பி எடுத்து மகிழ்ந்த குழந்தைகள்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி நகர் மற்றும் கிராம பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது .விழாவை முன்னிட்டு ஆண்டிபட்டி சீனிவாச நகரில் நகர் பொதுமக்கள் சார்பாக விநாயகர் சிலை வைக்கப்பட்டு, கண் திறக்கப்பட்டு பூஜைகள் நடந்தது. அதனைத் தொடர்ந்து தீபராதனை காட்டப்பட்டு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. இதனைத் தொடர்ந்து சிலை முன்பாக 360° செல்பி பூத் வைக்கப்பட்டு, அதில் ஏறி நின்று குழந்தைகள் விநாயகர் உடன் செல்பி எடுத்தும், வீடியோ எடுத்தும் மகிழ்ந்தனர். செல்பி பூத் வைக்கப்பட்டு குழந்தைகள் ஆர்வமாக கலந்து கொண்டது இப்பகுதியில் வித்தியாசமாக இருந்தது. இதனை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது .நிகழ்ச்சி ஏற்பாடுகளை இப்பகுதி மனோஜ் குமார் தலைமையில் விழா குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
No comments:
Post a Comment